இனி காதலர் தினம் கிடையாது.. இளைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தின் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் மதன் திலாவர், அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை பஞ்சாயத்து ராஜ் மற்றும் சமஸ்கிருத கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். 

இந்த நிலையில், அமைச்சர் மதன் திலாவர் காதலர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பின்படி, பிப்ரவரி 14ஆம் தேதியை தாய் தந்தையரை வணங்கும் நாளாக கொண்டாட வேண்டும். 

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய கல்வியாண்டிற்கான காலண்டரில் பிப்ரவரி 14ஆம் தேதி பெற்ற தாய் தந்தையை வணங்கும் நாள் என்று அச்சிட உத்தரவிடபட்டுள்ளது. உலகில் அனைவருக்கும் முக்கியமானவர்கள் தாய் தந்தையர் தான். ஆகவே, பிப்ரவரி 14-ஆம் தேதி அவர்களை வணங்கி நமது அன்பை தாய் மற்றும் தந்தைக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming fourteen no lovers day bjp minister madhan thilavar info


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->