முதல்வர் கையெழுத்துடன் காதல் கடிதம் அனுப்பிய மாணவர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்வான் குஸ்கார் நகரில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு கல்லூரி லெட்டர் பேடில், முதல்வர் கையெழுத்துடன் காதல் கடிதம் ஒன்று கடந்த 25ம் தேதி குறிப்பிடப்பட்டு வந்தது.

அந்த கடிதத்தில், மாணவியின் பெயர் எழுதப்பட்டு, ”உன் மீது நம் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் காதல் வயப்பட்டுள்ளார். ஆனால், நீயோ எந்த பதிலும் அளிக்கவில்லை. அவரால் தனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். 

அதனால், அவருக்கு உதவ வேண்டும். அதன் மூலம், நமது கல்லூரி மாணவர் எதிர்காலத்தில் இது போன்ற நிலைக்கு தள்ளப்படாமல் இருப்பார்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் கல்லூரி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இணையத்திலும் வேகமாகப் பரவியது. 

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் சுதிப் சத்தோ உபாத்யாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கடிதம் அனுப்பிய முன்னாள் மாணவரை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த மாணவர் பழைய லெட்டர் பேட் ஒன்றினை நகல் எடுத்து, அதில் முதல்வரின் கையெழுத்தை இட்டு, கடிதம் அனுப்பியது தெரிய வந்தது.

இது குறித்து, விளக்கமளித்துள்ள கல்லூரி முதல்வர் சுதிப் சத்தோ உபாத்யாய், "இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு முன்னாள் மாணவர் இருப்பது தெரியவந்தது. அவர்கள் மூவரும் இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டனர். 

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவர்களிடம் இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டதாக தெரிவித்தார். கல்லூரி லெட்டர் பேடில் காதல் கடிதம் அனுப்பிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student write love letter with college principal singnature in west bengal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->