ஓட்டுநர் குறித்து அவதூறு பேச்சு - ஆட்சியரை அதிரடியாக நீக்கிய முதல்வர்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் ஒன்றான "பாரதிய நியாய சன்ஹிதா"  சட்டத்தின்படி விபத்து ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயலாமல் தப்பிச்செல்லும் ஓட்டுனர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் அதாவது, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாவட்டங்களில் லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜாபூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர் சங்க பிரதிநிதிகளுடன் அம்மாவட்ட ஆட்சியர் கிஷோர் கன்யால் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஓட்டுநர் சங்க பிரதிநிதி ஒருவர் ஆட்சியரிடம், "மென்மையாக பேசுங்கள்" என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியர் கன்யால், அந்த ஓட்டுநர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட ஆட்சியர், "எனது வார்த்தைகளால் யாராவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ், ஷாஜாபூர் மாவட்ட ஆட்சியரை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கி, உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஷாஜாப்பூரின் புதிய மாவட்ட ஆட்சியராக ரிஜுபஃப்னா நியமிக்கப்பட்டார். இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collector kishor kanyal dismiss in madhya pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->