அசத்தல் திட்டம்... ஒரு குழந்தை பிறந்தால் 100 மரங்கள் நடப்படும்.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகிரி மோட்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் சிக்கிம் மாநிலமும் ஒன்று.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் 100 மரங்கள் நடும் திட்டத்தினை மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழா மேடையில் பேசிய சிக்கிம் முதல்வர் "இந்த பசுமை திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக அமல் படுத்தப்பட்டுள்ளது.

நம் மாநிலத்தில் குழந்தைகள் பிறந்தவுடன் மரக்கன்று நடுவதன் மூலமாக பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் இயற்கை இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்த முடியும்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM launched plant 100 saplings every child born in Sikkim


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->