ஆந்திர ரெயில் விபத்து - 10 லட்சம் நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்வர்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள ஒரு ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

அப்போது, அந்த வழியாக வந்த பலாசா விரைவு ரயில் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பலாசா ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. 

இந்த விபத்தில் சிக்கி இதுவரைக்கும் பத்தொன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் ஏராளமானோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ரெயில் விபத்துக் குறித்து, ஆந்திரா மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீட்பு பணிகளை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm jegan mohan reddy announce ten lakhs compensation announce andira train accident peoples


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->