சந்திரயான்-2 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட்டது  இன்று இறுதிகட்ட பணிகள் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நிலவில் இறங்கி ஆய்வு நடத்தும் சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான முதல் முயற்சியில் கடந்த 15 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பட்டது.

விண்கலத்தில் உள்ள கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம்  வால்வில் ஏற்பட்ட விரிசலால் கசிவு ஏற்பட்டது .கசிவு ஏற்பட்ட இந்த இடத்தை கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் அதனை அடைக்கும் பணி மூன்று நாட்களாக நடைபெற்றது இதையடுத்து இன்று மதியம் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.


இதையடுத்து, இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில், சந்திரயான்-2 தொடர்பான  தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வந்தன. அதில் ஷேர் செய்யப்பட்ட ஒரு படம், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் எடுக்கப்பட்டதாகும். இந்த இடம் என்பது சந்திரயான்-2 பயணத்தில் முக்கியமான கட்டம். எனவே இது வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் என்றால் அது மிகையான வார்த்தை கிடையாது என்று கூறியுள்ளது.

சந்திரயான்-2 புவி சுற்று வட்டப் பாதை, பூமியின் தரைப்பகுதியிலிருந்து சுமார் 170 கி.மீ உயரத்தில் இருக்க கூடிய பகுதியாகும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் அங்கு சென்றடைய 14 நிமிடங்கள் மற்றும் 59 வினாடிகள் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chanthirayaan-2 photos uploded isro


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->