நெஞ்சை பதைபதைக்க வைத்த வீடியோ.. நொடியில் தப்பித்த குழந்தை.. தெய்வமாக இரயில்வே ஊழியர்.! - Seithipunal
Seithipunal


இரயில்வே ஊழியர் குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாங்கனி இரயில் நிலையத்தில், இரண்டாவது நடைமேடையில் ஒரு பெண்ணும் அந்த பெண்ணின் கையைப் பிடித்தபடி ஒரு குழந்தையும் சென்று கொண்டு இருந்தனர். இதன்போது குழந்தை திடீரென தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. 

அந்த நேரம், அந்த இரண்டாவது நடைமேடையில் அதி விரைவு இரயில் ஒன்று விரைந்து வந்துகொண்டு இருந்தது. இதனைக்கண்ட அதே பெண்மணி குழந்தையை தூக்குவது பதிலாக, பயத்தில் சற்று தள்ளி நின்று குழந்தையை மேலே எறிவரக்கூறி குரல் எழுப்பியுள்ளார். 

இரயிலும் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இரயில் ஓட்டுனரும் இரயில் ஹாரனை எழுப்புகிறார். இந்நிலையில், அங்கு பணியில் இருந்த இரயில்வே ஊழியர் (பாயிண்ட்மென்) மயூர் செல்கெ, எதிரே வரும் இரயிலையும் தமது உயிரையும் பொருட்படுத்தாது தண்டவாளத்தில் இறங்கி வேகமாக ஓடுகிறார். 

முதலில் பயமில்லாமல் ஓடினாலும், வழியில் உள்ள ஜல்லிகள் அவரது கால்களை தடுமாற்ற, சுதாரித்து நிலைத்து வேகமாக சிறுவனை நடைமேடையில் மேல் ஏற்றி விடுகிறார். பின்னர், அவர் நடைமேடையில் ஏறிய அடுத்த கணமே, இரயில் சிறுவன் இருந்த பகுதியை கடக்கிறது. 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகளை மத்திய இரயில்வே (Central Railway) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும் குழந்தையை காப்பாற்றிய இரயில்வே ஊழியர் மயூர் செல்கெவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Railway Video about Railway Employee Save Child Life Running Train Platform


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->