புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக 148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது -  மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா மற்றும் ஆன்மீகச் சுற்றுலா போன்றவற்றின் மேம்பாட்டுக்கான நான்கு திட்டங்களை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

"வருடத்தில் உள்ள 365 நாட்களும் சுற்றுலா செல்வதற்கு உகந்த நாடு இந்தியா என்பதை உலகிற்கு உணர்த்தி வருகிறோம். சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அதிகம் உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அந்நிய செலாவணி இருப்பு போன்றவற்றில் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் ஆன்மீகத் தலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது.

இங்கு சுகாதார சுற்றுலாவையும் கல்வி சார்ந்த முதலீடுகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. அந்தவகையில் புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக சுமார் 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது, "சுற்றுலா பயங்கரவாதத்தை  தடுக்கும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புதுவையின் புதுமைக்கு சுற்றுலா அடித்தளமாக உள்ளது, மத்திய அரசின் இந்த முயற்சியால் புதுச்சேரி விரைவில் சிறந்த சுற்றுலா மாநிலமாக விளங்கும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister kishan reddy speach in puthuchery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->