மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி.!

மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் கிஷன் ரெட்டி. இவர் நேற்று வீட்டில் இருந்த போது சரியாக 10.50 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்கள் அமைச்சர் கிஷன் ரெட்டியை மீட்டு சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவர் கார்டியோ நியூரோ மையத்தின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமைச்சருக்கு மருத்துவர்கள் பல்வேறு சோதனைகள் செய்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தற்போது அமைச்சரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த செய்தியைக் கேட்ட கட்சித் தொண்டர்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்றனர். இதனால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister kishan reddy admitted hospital in delhi aiims


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->