இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.. மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 562 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,17,26,507 இருந்து 3,17,69,132 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,08,96,354 இருந்து 3,09,33,022 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,25,195 இருந்து 4,25,757 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் நேற்று முன்தினம் வரையிலான வாராந்திர கொரோனா பரப்பு விகிதம் 10 விழுக்காட்டிற்கு மேலாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt says about corona 2nd wave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->