மழைக்கால கூட்டத்தொடர் || ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் "2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரின் போது வணிகம் மற்றும் பிற பொருட்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா மீது இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற நிலை குழு ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே போன்று எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்வாதி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 19ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் சுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு வருமாறு மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt has called monsoon session all party meeting on July19


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->