இந்தியாவில் புற்றுநோய் அதிகரிப்பு..!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புற்றுநோய் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா "நாடு முழுவதும் புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் 13,92,179 என இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 14,26,447 என உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் 14,61,427 என்ற எண்ணிக்கையை தற்பொழுது அடைந்துள்ளது. 

இதே நிலை நீடித்தால் வரும் 2025 ஆம் ஆண்டில் தற்போதைய புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையில் 12.8% அதிகரிக்க கூடும். நுரையீரல் சம்பந்தமான புற்றுநோய் பாதிப்புகளில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண் பிள்ளைகள் 29.2%, பெண் பிள்ளைகள் 24.2% பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டில் 8.6% என இருந்த 60 வயதிற்கு மேற்பட்டோர் நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.7% என அதிகரித்துள்ளது.

புற்றுநோயின் மூலம் ஏற்பட்ட மரணங்கள் பொருத்தவரை 2020இல் 7,70,230 என இருந்த நிலை 2021 ஆம் ஆண்டு 7,89,202 ஆக அதிகரித்தது. தற்போது 2022 ஆம் ஆண்டில் 8,08,558 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் புற்று நோய்க்கு சிறப்பான தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயாளிகளின் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government reported Cancer on the rise in India


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->