செல்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்.. குவியும் வாடிக்கையாளர்கள்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக  தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி, தக்காளியின் விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சில மாநிலங்களில் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை ஒரு சில கடை உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, தங்கள் கடைகளில் பொருட்களை வாங்கினால் தக்காளி இலவசம் என விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் செல்போன் கடை உரிமையாளர் அபிஷேக் அகர்வால் என்பவர் செல்போன் வாங்குபவர்களுக்கு 2 கிலோ தக்காளி இலவசமாக தருவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் அவரது கடையில் செல்போன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கிறனர். 

மேலும், இது குறித்து பேசிய கடையின் உரிமையாளர் அபிஷேக் அகர்வால், இந்த அறிவிப்பால் செல்போன்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Buy cellphone 2kg tomoto free in madhya pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->