ஏழு செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி. சி-56' - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஏழு செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி. சி-56' - எப்போது தெரியுமா?

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. 

அந்தவகையில் வருகிற 30-ந்தேதி காலை 6.30 மணிக்கு முதல் ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. சி-56' என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில்  சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்- சாட்' என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. 

பூமியில் இருந்து ஏவப்படும் இந்த செயற்கைக்கோள் 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. 
இந்த 'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. 

சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு ஏஜென்சிகளின் செயற்கைக்கோள் பட தேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.இந்த செயற்கைகோளுடன், மேலும் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSLVC 56 rocket launch coming thirty in sriharikotta


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->