#வீடியோ: பட்டாசு வெடித்ததே பஞ்சாயத்தாக, துப்பாக்கியால் சுட்டு ஆதரவு.. தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட பாஜக மகளிரணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில், கடந்த 5 ஆம் தேதி இரவன்று மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் மற்றும் டார்ச் வெளிச்சத்தை ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்திருந்தார். 

இதன்படி இந்தியா முழுவதும் மக்கள் பிரதமரின் கோரிக்கையை ஏற்று விளக்குகளை ஏற்றி தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்திய நிலையில், சில இடங்களில் பட்டாசு வெடித்தது பஞ்சாயத்தானது.. இந்நிலையில், பாஜக மகளிரணி பெண்மணி துப்பாக்கியால் சுட்டது எதிர்ப்பை சந்திக்க துவங்கியுள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பால்ராம்பூர் மாவட்டத்தில் பாஜக மகளிரணியை சார்ந்த பெண்மணி மஞ்சு திவாரி. இவர் பிரதமரின் கோரிக்கையை ஏற்று விளக்கு ஏற்றுவார் என்று எண்ணிய நிலையில், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு தனது ஒற்றுமையை காட்டியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சியை இணையத்தில் பதிவு செய்யவே, இது குறித்த பதிவு மிகவும் வைரலாகி கண்டனத்தை சந்தித்தது. இதனையடுத்து, காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP woman team member fire a gun modi call lighting against corona video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->