பரப்புரையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்.பி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா வடக்குத் தொகுதியில் சிட்டிங் எம்பியாக இருக்கும் காகன் முர்முவிற்கு பாஜக சார்பில் மீண்டும் அதே தொகுதியில் சீட் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், காகன் முர்மு வாக்கு சேகரிக்கும்போது ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

“நீங்கள் பார்ப்பதை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஆம், இவர்தான் பாஜக எம்பியும் மால்டா வடக்குத் தொகுதி வேட்பாளருமான காகன் முர்மு. இவர், வாக்கு கேட்கும்போது பெண் ஒருவரை முத்தமிட்டுள்ளார். பெண் மல்யுத்த வீரர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட எம்.பி.க்கள் முதல் வங்காளப் பெண்களைப் பற்றி கேவலமான பாடல்களைப் பாடும் தலைவர்கள் வரை பாஜக முகாமில் பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு பஞ்சமில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து எம்பி காகன் முர்மு, “எல்லோரும் குழந்தைகளை நேசிக்கிறார்கள். அந்தப் பெண் எனக்கு அறிமுகமானவர். அந்தச் சமயத்தில் சிறுமியுடன் அவரது பெற்றோரும் உடன் இருந்தனர். அந்த படத்தை ஃபேஸ்புக்கில் வைரலாக்கி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உண்மையில் பெண் இனத்தை அவமரியாதை செய்துள்ளது” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp kissing women in west bengal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->