நான் ஸ்ரீராமனின் வம்சாவளியை சார்ந்தவள்..! அயோத்தி பிரச்சனையில் நீதிமன்ற கேள்விக்கு பாஜக பெண் எம்பி அதிரடி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள உத்திரப்பிரேதேசம் மாநிலத்தில் உள்ள ஊர் அயோத்தி.. இந்த ஊரில் தசரத மன்னருக்கு பிறந்தவர் ஸ்ரீராமர். இந்த அயோத்தில் பின்னாளில் வந்த படையெடுப்பிற்கு பின்னர் முஸ்லீம் மற்றும் இந்துக்கள் அதிகளவில் வாழும் பகுதியாக மாறியது. மேலும்., ராமர் கோவில் உள்ள பகுதிக்கு அருகில் இருக்கும் இடமானது மசூதிக்கு உரியது என்ற சர்ச்சைக்குரிய பிரச்சனை நீண்ட வருடங்களாக நடந்து வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிகள் ஐந்து பேர் கொண்ட குழுவானது விசாரணை செய்து வருகின்றனர். ராமரின் வழியை சார்ந்தவர்கள் ராமரின் வம்சம் என்றும் ரகுவம்சம் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அயோத்தியில் வாழ்ந்து வரும் நிலையில்., அயோத்தியில் ரகுவம்சத்தினர் இன்னும் வசித்து வருகின்றனரா? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். 

ஜெய்ஸ்ரீ ராம், ஸ்ரீராம ஜெயம், sriramajeyam, bjp mp Diya Kumari, பாஜக எம்பி தியா குமாரி,

இந்த கேள்வியை கேட்டு கொதித்தெழுந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சார்ந்த தியா குமாரி என்ற பெண்மணி நான் ஸ்ரீராமரின் வம்சாவளியை சார்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் எம்பியும் ஆவார்.. இது குறித்து அவர் தெரிவித்தாவது., ஸ்ரீராமரின் வம்சாவளியை சார்ந்தவர்கள் உலகம் முழுவதிலும் இருக்கின்றனர். 

நான் பிறந்து வளர்ந்த எனது குடும்பம் ராமரின் மகனான குஷாவின் பரம்பரையை சார்ந்தவர்கள். இதற்கான கையெழுத்து மற்றும் மரபணு ஆதாரங்கள்., ஆவணங்கள் எனது குடும்பத்தாரிடம் உள்ளது. இந்த ஆதாரங்கள் தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் தான் தயாராக உள்ளேன். நீதிமன்ற விசாரணையில் நான் தலையிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp diya kumari speech about ramar temple issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->