மத்திய புலனாய்வு அமைப்பை தவறாக பயன்படுத்தும் பாஜக தலைவர்கள்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி மத்திய புலனாய்வு அமைப்பை தவறாக பயன்படுத்துவது இல்லை! அவர் பெயரைச் சொல்லி சில பாஜக தலைவர் அவ்வாறு செய்கின்றனர்!

மத்திய புலனாய்வு அமைப்பானது தன்னாட்சி அமைப்பாகும். நாடு முழுவதும் மத்திய புலனாய்வு அமைப்பானது தங்களின் அதிகாரத்திற்குட்பட்டு சோதனைகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

 இந்நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகப்படியான நடவடிக்கைக்கு எதிராக மேற்குவங்க மம்தா பானர்ஜி அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்திற்கு 189 எம்எல்ஏக்கள் ஆதரவாகவும் 69 எம்எல்ஏக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

தீர்மானம் குறித்து மம்தா பானர்ஜி பேசுகையில் பிரதமர் மோடி மத்திய புலனாய்வு அமைப்பை தவறாக பயன்படுத்துவதாக நினைக்கவில்லை. சில பாஜக தலைவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்காக மத்திய புலனாய்வு அமைப்பை தவறாக பயன்படுத்துகின்றனர். 

மத்திய அரசு மற்றும் பாஜகவின் கொள்கைகள் வெவ்வேறு என்பதை பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு கொள்கையும் இணைந்து செயல்படுவது நாட்டிற்கு நல்லதல்ல. தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார வழியில் நடக்கிறது. நான் கொண்டு வந்த தீர்மானம் யாருக்கும் எதிரானது அல்ல. 

மத்திய புலனாய்வு அமைப்பு ஒரு சார்பு செயல்பாட்டிற்கு எதிராக மட்டுமே சட்டசபையில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leaders misusing the Central Intelligence Agency


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->