மாநில அரசின் கூட்டணியை உடைக்க பாஜக வியூகம்.! வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் முதலமைச்சர் குமாரசாமியின் தலைமையிலான ஆட்சியானது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளித்ததால்., காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியானது நடைபெற்று வருகிறது. 

தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏக்கள் உட்பட 225 உறுப்பினர்களில் சுமார் 120 பேரின் ஆதரவானது இருந்து வருகிறது. இந்த நிலையில்., மந்திரி பதவி கிடைக்காததால் சுமார் 20 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். 

இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களை பயன்படுத்தி 105 எம்.எல்.ஏக்களை தற்போது கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சியை சார்ந்த 11 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்களின் பதவியை இராஜினாமா செய்து அறிவித்தனர். 

இந்த இராஜினாமா கடிதத்தை சபாநாயகரின் செயலாளரிடம் வழங்கியுள்ள நிலையில்., தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழ்ச்சிக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.  

இது குறித்து செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுனா தெரிவித்தாவது., தற்போதுள்ள கூட்டணி தொடர வேண்டும். இந்த அசாதாரண நிலையினை நல்வழியில் சுமூகமாக தீர்த்து கொண்டு வருகிறோம். கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி., கூட்டணியை உடைக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அரசியல் சூழ்ச்சிக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சி உள்ளது என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp karnadaga plan speech about congress party mallikarjuna karge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->