தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை உடனே நிறுத்துங்க.!! முதல்வருக்கு பசவராஜ் பொம்மை கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய காவிரி நீர் பங்கீடு கடந்த ஜூன் மாதம் முதல் கர்நாடக அரசு சரியான விகிதத்தில் திறக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை முற்றிலுமாக வரண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிர்பந்தை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அதனை கர்நாடகா அரசு ஏற்க மறுத்த நிலையில் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தமிழகத்திற்கு சேரவேண்டிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்து விட்டது.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா நீர் பிடிப்பு பகுதிகளில் பகுதியை மழை பெய்யாததால் கர்நாடக விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப மீதம் இருக்கும் நீரை தமிழகத்திற்கு திறந்து விட முயற்சி செய்கிறோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கிடையே கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் எனவும், கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் சித்தராமையா உறுதியாக இருக்க வேண்டும் எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Basavaraj Bhommi letter to KarnatakaCM to stop opening water to TN


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->