இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. 

ஆனால், இந்தியாவில், இதுபோன்ற ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 

இந்த தகவலை ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த்துள்ளார். இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
,
"இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

நம்முடைய ஆழமான நட்பின் விளைவாக, இந்த ஒப்பந்தம் எங்கள் வர்த்தக உறவுகளின் முழு திறனை அடைவதற்கும், பெரிய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் வழி வகுக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austrelian parliment approved indian agreement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->