வீதியில் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தி, பிகு பண்டிகையை கொண்டாடிய காவல்துறை.. வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் தமிழகத்தில் தமிழ் வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனாவின் காரணமாக மக்கள் இல்லங்களிலேயே பாதுகாப்பாக தமிழ் வருடப்பிறப்பை வரவேற்றனர். 

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிகு என்ற திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இது விவசாயத்துடன் தொடர்புடைய பண்டிகையாகும். பிகு திருவிழா என்பது அறுவடை திருவிழாவாகும். அசாம் மக்கள் இந்த பண்டிகையை வெகுவாக கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும். 

இந்த நிலையில், தற்போது கரோனா அச்சுறுத்தல் ஊரடங்கின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், வீட்டிலேயே தெய்வங்களை வழிபட்டு தங்களின் திருவிழாவை சிறப்பித்தனர். மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதை மறக்கும் வண்ணம் காவல் துறையினரும் வெளிநாடுகளில் மக்கள் குடியிருப்பிற்கு சென்று பாட்டு பாடியும், நடனம் ஆடியும் மக்களை மகிழ்வித்து வந்தனர். 

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகர போக்குவரத்து காவல் துறையினர் பிகு பண்டிகையை சிறப்பித்துள்ளனர். மேலும், கரோனா வைரஸின் அச்சத்தால் மக்கள் இல்லத்திலேயே முடங்கியுள்ள நிலையில், இது சிறிது ஆறுதலை அளிக்கும் என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam police celebrate Bihu festival video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->