தொடரும் போராட்டத்தினால் டிசம்பர் 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!  - Seithipunal
Seithipunal


தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இருப்பினும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டமானது அதிகமான அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல கலவரங்கள் மூண்டதால் அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 

இதன்படி நேற்று மாலை 7 மணி முதல் இன்று மாலை 7 மணி வரை சமூக வலைதளங்கள் செயல்பாட்டினை தடை செய்யும் விதமாக, இணையத்தொடர்பை முழுவதுமாக துண்டித்து அரசு உத்தரவிட்டது. அதேபோல தொடர்ந்து பேருந்துகள் எரிப்பு போன்ற போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 22ஆம் தேதி வரை அசாம் மாநில பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam govt announced all schools holiday till dec 22 for protest against CAB


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->