காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணையும் முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


அசாம் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அங்கிதா தத்தா, இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவரான பி.வி. ஸ்ரீனிவாசுக்கு எதிரான தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். 

மேலும் அவமானத்திற்கு ஆளாவதாகவும் பாலின பாகுபாடு ஏவப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை பாஜக முதல் மந்திரி ஹிமந்த் பிஸ்வா ஷர்மா வரவேற்று இருந்தார். 

இதற்கிடையே அங்கிதா தத்தாவிடம் மாநில காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டதற்கு அவரது விளக்கம் ஏற்கபடவில்லை. 

இதனால் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அங்கிதாவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அங்கிதா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இவருடன் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ பிஸ்மிதா பாஜகவில் இணையுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam ex youth congress chief join bjp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->