அசானி புயல் காரணமாக சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார்! மேற்கு வங்காள முதல்வர்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  மே மாதம் 10 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை பாஸ்சிம், ஜார்கிராம், மேதினிப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார்.

இந்நிலையில் அசானி புயல் தீவிரமடைந்து வருவதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து முதல்வரின் சுற்றுப்பயணம் மே 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுப்பயணத்தின்போது மே 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிர்வாக கூட்டத்தை, மேதினிப்பூர் கல்லூரி வளாகத்தில் நடத்த உள்ளார். மேலும் அதே வளாகத்தில் மறுநாள் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி ஜார்கிராமில் கட்சி மட்டும் நிர்வாக கூட்டத்தில் பங்கேற்று,  இரண்டு மாவட்டங்களிலும் அரசின் பல்வேறு சமூக திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asani cyclone due to mamata reschedule program


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->