ஆரோவில் அருகே மாமியாரின் தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் இரத்த வெள்ளத்தில் மரணம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் (வயது24) இவர் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

முகுந்தன் தற்போது மனைவியுடன் ஆரோவில் குமரன் நகர் வீதியில் வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இவர் செல்ல பிராணியான நாய்களை வளர்த்து விற்பனை செய்து வரும் தொழிலை செய்து வந்தார். 

இவர் தங்கி இருக்கும் வீட்டின் எதிரில் மாமியார் கோமதி வசித்து வந்த நிலையில், புதுவை பகுதியைச் சேர்ந்த தேவா என்பவருடன் மாமியாருக்கு தகாத உறவு இருந்தது தெரிய வந்துள்ளது. 

தேவா மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை முகுந்தன் பார்த்துள்ளார். நேற்று இரவு புதுச்சேரி தியேட்டரில் திரைப்படம் பார்த்துவிட்டு மனைவியுடன் முகுந்தன் வீட்டுக்கு வந்தார்.

அப்போது தேவாவுக்கும் முகுந்தனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தேவா, முகுந்தன் வீட்டுக்கு வந்து முகுந்தனை கத்தியால் சரமாரியாக கழுத்து பகுதியில் குத்தி தப்பி ஓடி விட்டார். 

கணவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மனைவி ரம்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து கிடந்த கணவனை பார்த்து கூச்சலிடவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முகுந்தனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வந்து உடனே முகுந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த முகுந்தனுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மாமியாரின் தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தேவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arroville murder


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->