மேற்குவங்க ஹிந்தி எதிர்ப்பு கண்டன பேரணி.. அறிஞர் அண்ணா, கருணாநிதி புகைப்படங்களின் பதாகைகள்.! - Seithipunal
Seithipunal


மத்தியில் ஆளும் பாஜகவின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியை திணித்து வருவதாக ஹிந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகள் குழு மத்திய கல்வி நிலையங்களில் இந்திய கட்டாயமாக்கப்படுவது குறித்து பரிந்துரை செய்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருக்கும் இந்து திணிப்பை ஹிந்தி பேசாத அந்தந்த மொழி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த பேசாத பல்வேறு மொழியினரும் கலந்து கொண்டனர். அப்போது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கைகளில் அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை பயன்படுத்தியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்களை திமுகவினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti-Hindi protest rally in West Bengal used Banners of Arijan Anna, Karunanidhi photos


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->