புலிக்கறியை பங்கு போடுவதில் தகராறு.! கைது செய்த வனத்துறையினர்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்து போன புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களை வனத்துறையினர் கைது செய்ய முடிவெடுத்துள்ளனர். 

விளைநிலங்களில் மிருகங்கள் புகுந்து சேதப்படுத்துவதை தவிர்க்க சட்டத்திற்கு புறம்பாக ஆக்கப்பள்ளம் கிராமத்தினர் மின்சார வேலி அமைத்துள்ளனர். சென்ற நான்கு நாட்களுக்கு முன்பாக வனப்பகுதியினர் அங்கு புலியின் கால் தடம் இருப்பதை கண்டறிந்து அதை பிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தி வைத்துள்ளனர்.

ஆனால், வனத்துறையினர் கண்டுபிடிக்கும் முன்பாகவே அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இதனை தொடர்ந்து புலிக்கறியை பங்கு போட அந்த கிராம மக்கள் சண்டை போட்டது தெரியவந்துள்ளது. மேலும், புலி இறைச்சியை சாப்பிட்டவர்களாக சிலரை சந்தேகத்தின் பேரில் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முயற்சித்தனர்.

இதனால், கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 12 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் புலி கறி சாப்பிட்டது தெரியவந்துள்ளது. மேலும் புலியை தின்றுவிட்டு அதன் தோலை அங்கிருந்த ஒரு பழைய கிணற்றில் வீசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, புலித்தோலை மீட்க வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ANthra village peoples eating Tiger Meat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->