பாலத்தின் அடியில் கிடந்த பிளாஸ்டிக் பேரலில் இப்பெண்ணின் உடல்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் சோமயாஜுல கிராமத்திற்கு வெளியேயுள்ள சாலையின் குறுக்கே சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது.

பாலத்திற்கு அடியில் கிடந்த பிளாஸ்டிக் பேரலிலிருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியில்  சென்றவர்கள் பேரலை எட்டி பார்த்தனர். அதில் 35 வயது பெண் ஒருவரின் பிணம் அடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து கர்நூல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் பிணத்தை மீட்டனர்.

முதல் கட்ட தகவலின் படி அந்த பெண் வேறு எங்கேயோ கொலை செய்யப்பட்டு உடலை இங்கு வீசி சென்றுள்ளனர். அந்த பெண்ணின் வாயில் பிளாஸ்திரி ஒட்டியும், கை கால்களும் கட்டப்பட்டும் இருந்தது.

காவல்துறையினர் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருப்பதால் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட  வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இறந்து கிடந்த பெண் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு காவல்துறை சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andra karnol young women mystery death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->