வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக இருந்த பணம்: ஹவாலா பணமா என துப்புதுலக்கும் போலீசார்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து லோடு ஆட்டோவில் 6 வாஷிங் மெஷின்கள் ஏற்றி விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக வாகன தணிகையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லோடு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். 

அதில் சீல் பிரிக்காமல் வாஷிங் மெஷின்கள் இருந்தன. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் வாஷிங் மெஷின்களை திறந்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

மொத்தம் 6 வாஷிங் மெஷின்களில் 1.30 கோடி ஹவாலா பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் கண்டுபிடிக்கப்பட்ட பணம் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் தசரா பண்டிகை முன்னிட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கடை உரிமையாளர் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். 

இருப்பினும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra washing machine in crores police seized


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->