தெலுங்கானாவில் பரபரப்பு: சமைக்காத கறியை தின்ற தொழிலாளி! நேர்ந்த சோகம்! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் மது போதையில் சமைக்காத கோழி கறியை தின்று தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் உள்ள கொத்த குடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் பீம நாயக். இவர் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் நேற்று வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது வீட்டில் சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர். அதனைப் பார்த்த பீம மது போதையில் பச்சை கோழி கறி என்று கூட பாராமல் அதனை ஆர்வமாக எடுத்து சாப்பிட்டார்.

தொடர்ந்து மது குடித்துக் கொண்டே பச்சை கோழிக்கறிகளை சிறுசிறு துண்டுகளாக வாயில் போட்டு அப்படியே விழுங்கினார். 

பின்னர் எலும்புடன் இருந்த கறித்துண்டை எடுத்து சாப்பிட்ட போது அவரது தொண்டையில் கறித்துண்டு சிக்கிக்கொண்டதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். 

இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பீம நாயக்கை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பீம நாயக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவல்களின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சை கோழிக்கறியை மதுபோதையில் தொழிலாளி தின்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra uncooked chicken eating Worker dies 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->