ஆந்திராவை உலுக்கும் பறவைக்காய்ச்சல்... இறைச்சிக்கடைகள் இயங்காது: ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, நெல்லூர் பெடலகுரு, மண்டலம் சட்லகுட்டா போன்ற பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கி 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்து விட்டன. 

திருப்பதி, போல் புலிகாட் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள் மூலம் நோய் பரவியதாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால மாநிலம் முழுவதும் 721 குழுக்களும் நெல்லூர் மாவட்டத்தில் 37 குழுக்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தியபோது, கோழிகள் உயிரிழந்த பகுதிகளை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் மூன்று நாட்கள் சிக்கன் கடை மூடவேண்டும். 

ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சிக்கன் கடைகள் 3 மாதத்திற்கு திறக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த கோழிகள் ஆழமான இடத்தில் புதைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

மாவட்ட போலீசார், மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள், கிராம கூட்டங்கள் நடத்தி கடை உரிமையாளர்கள், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் நோய் தடுப்பு பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh bird flu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->