ஆந்திரா | முட்புதரில் கிடந்த சிறுமியின் சடலம்! விசாரணையில் கிடைத்த ஆதாரம்! பிடிபட்ட உறவினர்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, பீமாவரத்தைச் சேர்ந்தவர் அஞ்சி. இவரது மனைவி துர்கா. இவர்களது மகள் ரத்தினகுமாரி (வயது 14) இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மாணவிக்கு உடல் நலம் சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.  சிறுமியின் பெற்றோர் கடந்த 26 ஆம் தேதி சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றனர். 

இதனை அறிந்த சிறுமியின் உறவினரான பக்கத்தை வீட்டைச் சேர்ந்த மவுலு. சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். 

பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இந்த சம்பவத்தை சிறுமி வெளியில் சொல்லிவிட்டால் பிரச்சனை ஏற்படும் என சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். 

சிறுமியின் பிணத்தை மவுலு வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் வீசினார். சிறுமியின் பெற்றோர் மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

இருப்பினும் சிறுமி கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளிக்க சென்றபோது மவுலுவும் சிறுமியின் பெற்றோருடன் சென்றிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 3 நாட்களாக சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மவுலு வீட்டின் பின்புறம் துர்நாற்றம் வீசியது. 

அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இது குறித்து காவல் நிலைய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் விசாரணையின் போது மவுலு வீட்டில் சிறுமியின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் மவுலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra girl molested and murdered arrested relative


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->