அமர்நாத் யாத்திரை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


அமர்நாத் யாத்திரை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அமர்நாத் யாத்திரை வருகின்ற ஜூன் மாதம் 30ஆம் தேதி துவங்கவுள்ளது.

நாற்பத்தி மூன்று நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை பாரம்பரிய முறைப்படியும், கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் தொடங்க உள்ளது.

இதனையடுத்து யாத்திரைக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், உளவுத்துறை மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

மேலும் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் ஐஎஸ்ஐ உடன் இணைந்து சதித்திட்டம் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளதால் அதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitshah head meeting on amaranth yatra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->