கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு, காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு நிலமை மேம்பட்டுள்ளது - அமித் ஷா - Seithipunal
Seithipunal


1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சீனப் படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்கள் நினைவாக, ஒவ்வொரு வருடமும் இன்று தேசிய காவல்துறை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இதனையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் தியாகத்தால் இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. 

கொரோனா பெருந்தொற்றின் போது நாடு முழுவதும் உள்ள காவல்துறை மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் முக்கியப் பங்காற்றினர். வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரங்களை நீக்கியுள்ளோம். அதற்கு பதிலாக, அங்குள்ள இளைஞர்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளோம். 

இதனால் இந்த பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வன்முறை குறைந்துள்ளது. நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் ஏகலவ்யா பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது, இந்த கட்டிடங்களில் தேசிய கொடி பறக்கிறது. 

மேலும் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் கிளர்ச்சி பாதித்த பகுதிகளில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடந்த 8 ஆண்டுகளில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah says Security situation in northeastern states Kashmir improved in last 8 years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->