அதிகார துஷ்பிரயோகம் அம்பலம்: 2 வீடு ஒதுக்கீடு ரத்து..! உச்ச நீதிமன்றம் கடும் அபராதத்துடன் அதிரடி தீர்ப்பு!
Abuse power Ambalam 2 house allotment cancelled Supreme Court issues drastic verdict heavy fine
அரியானா மாநில வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்ட உயர்தர குடியிருப்புகளில், நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கென தலா ஒரு வீடு என இரு வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இந்த ஒதுக்கீடு அதிகாரப் பதவியை தவறாக பயன்படுத்திய நடவடிக்கை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதற்கு எதிராக பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், வீடு ஒதுக்கீடு தொடர்பான நிர்வாகத் தீர்மானங்களில் தலையிட முடியாது எனத் தெரிவித்து உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.அதனைத் தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய உறுப்பினரான தினேஷ் குமார் மேல்முறையீடாக உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் சந்திரன் அமர்வு, உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து, இரு வீடுகளின் ஒதுக்கீட்டையும் செல்லாததாக அறிவித்தது.
மேலும், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வீடு பெற்றவர்களுக்கும் அபராதம் விதித்து, ஒரு மாதத்திற்குள் வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.இந்த ஒதுக்கீடுகள் தன்னிச்சையானதும், பாரபட்சமானதும், தகுதி விதிமுறைகளை மீறியதும் என நீதிபதிகள் கடுமையாக சுட்டிக்காட்டினர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் நெருக்கத்தவர்களுக்கு சலுகை வழங்குவது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு விரோதமானது என்றும், வீடு ஒதுக்கீடு முறைகள் முழுமையாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடாது; ஆனால் இவ்விவகாரத்தில் சுயநலம் மற்றும் பாரபட்சமே மேலோங்கியுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
English Summary
Abuse power Ambalam 2 house allotment cancelled Supreme Court issues drastic verdict heavy fine