இந்து கடவுளை வழிபட மாட்டேன் என சபதம் எடுத்த அமைச்சர்! - Seithipunal
Seithipunal


இந்தியாவை உடைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்!

டெல்லியில் உள்ள அம்பேத்கர் திடலில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற பௌத்த மத நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டு பௌத்த சமயத்திற்கு மாறினார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்து கொண்டார். விழாவில் மதம் மாறும் போது சர்ச்சைக்குரிய வகையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

அந்த உறுதி மொழியில் "பிரம்மா விஷ்ணு மகேஷ்வர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! அவர்களை வணங்க மாட்டேன்! கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் ராமர் மற்றும் கிருஷ்ணர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை அவர்களையும் வணங்க மாட்டேன்" என அனைவரும் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளவில் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு "புத்தரை நோக்கி செல்லும் பணியை ஜெய் பீம் என்று அழைப்போம். அசோக விஜயதசமி அன்று ஜெய் பீம் இயக்கத்தின் கீழ் பத்தாயிரத்து மேற்பட்ட மக்கள் சாதி மற்றும் தீண்டாமை இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என குறிப்பிட்டு ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு தொடர்பாக பாஜக தகவல் தொடர்புத்துறை தேசிய பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து "அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் இந்தியாவை உடைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எந்த தவறும் செய்யாதீர்கள். இந்த இந்து மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் முதன்மை ஆதரவாளராக இருப்பார்" என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

மேலும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி செய்தியாளர் சந்திப்பில் "அமைச்சரின் பேச்சால் இந்து மதத்திற்கு பௌத்த மதத்திற்கும் நடந்த மிகப்பெரிய அவமதிப்பு. அமைச்சர்கள் மாநாட்டில் கலவரத்தை உருவாக்கும் முயல்கிறார்கள். இந்து மதத்தை இழிவு படுத்துவதற்காக ராஜேந்திர பால் கௌதமை கட்சியிலிருந்து முதல்வர் அறிவிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ராஜ பெருமாள் மீது புகார் அளிக்க உள்ளோம்" என பேட்டியளித்து இருந்தார்.

இந்நிலையில் வீடியோ குறித்து விளக்கம் அளித்த ஆம் ஆத்மி அமைச்சர் "பாஜக ஒரு தேசவிரோத சக்தி. பௌத்தத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் வேண்டுமானால் புகார் செய்யட்டும். சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரத்தை அரசிலே சாசனம் வழங்குகிறது. ஆம் அதுவே கட்சிக்கு பாஜக பயப்படுகிறது. அதனால் தான் பல்வேறு குற்றச்சாட்டு எங்கள் மீது பொய் வழக்கு மட்டுமே போட முடியும்" என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP minister vowed not to worship Hindu gods


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->