காதலித்தவனை கரம்பிடிக்க.. கடல் கடந்து வந்த பெண்.! 6 மாதங்களுக்கு பின் வெளிவந்த கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal



காதலனை திருமணம் செய்வதற்காக கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த இளம் பெண் மாயமான வழக்கில்   தற்போது உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ஹரியானா மாநிலம் ரோக்தக்  பகுதியைச் சார்ந்தவர் நீலம் 23 வயதான இவர் ஆங்கில புலமை தேர்வில் தேர்ச்சி பெற்று கனடா நாட்டிற்கு பணிக்காக சென்றார்.

இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். அதன் பிறகு இவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாததால் அவரது பெற்றோர் காவல் துறையிடம் புகாரஅளித்துள்ளனர். காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால்  அரியானா மாநில உள்துறை அமைச்சரிடம் முறையிடவே அவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக சுனில் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்   தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள நீலமை இந்தியா வரவழைத்ததாக ஒப்புக்கொண்டு உள்ளார். இருவரும் ஒன்றாக சுற்றி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  துப்பாக்கியால் சுட்டு தனது காதலியை கொலை செய்து இருக்கிறார் அந்த இளைஞர்.

மேலும் அதற்கான தடயங்களையும் அளித்து தனது வயலில் இறந்த பெண்ணின் சடலத்தை புதைத்துள்ளார். இவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அவரது உதவியுடன் வயலுக்கு சென்று இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண் நீலம் தானா என்பதை கண்டறிய அவரது தாயின்  ஒத்துழைப்புடன் டிஎன்ஏ சோதனையும் நடத்தப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a woman from canada was murdred in rohtak form after 1 year cbi solved the case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->