காதல் திருமணம் செய்த மகன்., வேறொரு இளைஞரை அழைத்து வந்து மாமியார் செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் பேய் ஓட்டுவதாக கூறி இளைஞர் ஒருவரை அழைத்து வந்து மருமகளை அடித்து, தாக்கி, துன்புறுத்தி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரட்சிதா மற்றும் மல்லேஷ் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து, அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று தற்போது இருக்கின்றது. இதனை தொடர்ந்து காதல் திருமணத்தை ஏற்காத அந்த இளைஞரின் தாய் தனது மருமகளை பல்வேறு வகையில் கொடுமைகளைச் செய்து வந்துள்ளார். 

தற்பொழுது கொடுமையின் உச்சகட்டமாக மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து அடித்து சரமாரியாக துன்புறுத்தி இருக்கின்றார். எனவே, ரஜிதா வலி தாங்காமல் அலறிக்கொண்டு இருக்கின்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி காண்போரை கண் கலங்க வைக்கிறது. 

இந்த இளைஞனின் தாக்குதலால் பலத்த காயமடைந்த இளம்பெண் சுயநினைவை இழந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த காரணத்தால் மருமகளை வெறித்தனமாக கொடுமை செய்த மாமியாரால் அப்பகுதியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a mother in law attack het daughter in law


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal