ரூ.20 இலட்சம் பேரம்.. பெண்ணாக இருந்தும் நீதிக்கு போராடாது, நிதிக்கு மதிப்பளித்த பெண் உதவி ஆய்வாளர்.!! - Seithipunal
Seithipunal


அகமதாபாத்தில் பாலியல் குற்றசாட்டை மறைத்து, சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த பெண் காவல் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

குஜராத் மானியத்தில் உள்ள மேற்கு அகமதாபாத் பகுதியியல் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுவேதா ஜடேஜா. இவர் கடந்த வருடம் 2 பெண்கள் கேணல் ஷா என்பவரின் மீது அளித்த பாலியல் புகாரை, சாதாரண குற்றமாக மாற்றி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். 

இந்த விசயத்திற்கு கேணல் ஷாவின் சகோதரர் ரூ.20 இலட்சம் வழங்கிய நிலையில், முதற்கட்டமாக ரூ.5 இலட்சம் வழங்கிய நிலையில், மீதமுள்ள ரூ.15 இலட்சம் தர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஆனால், காவல் உதவி ஆய்வாளர் சுவேதா ரூ.15 இலட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான தகவலை எப்படியோ அறிந்து கொண்ட இலஞ்ச ஒழிப்புத்துறையினர், சுவேதாவை கைது செய்தனர். 

பின்னர் இவரின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை விசாரணை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Gujarat Ahmedabad Sub Inspector arrest change complaint about sexual abuse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->