கேரளாவில் 68வது 'ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்'.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெறும் நேரு டிராபி படகுப்போட்டியைக் காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். அதிலும் இங்கு நடைபெறும் பாம்பு படகுகளின் அணிவகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் எந்த விதமான நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்ததால்,புகழ்பெற்ற இந்த படகு போட்டியும்   நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு 68வது 'ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்' என்று அழைக்கப்படும் பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் நாளை நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான படகு குழாம் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதுவரை 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் கலந்துக் கொள்வதற்காக  பதிவு செய்துள்ளன. 

நாளை மதியம் 2.30 மணிக்கு நடக்கவுள்ள இப்போட்டியை, கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவுக்குப் பிறகு, போட்டிகள் 3 மணிக்குத் தொடங்குகிறது. 

ஹீட் சுற்றுகள் தலா 4 அணிகளுடன் நடத்தப்படும். இதில் முதலாவதாக வரும் அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிடும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாம்பு படகுக்கு நேரு கோப்பை வழங்கப்படுகிறது. 

தற்போது வரை, இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ரூ.23 லட்சத்தை எட்டியுள்ளது. இது ரூ. 50 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை காண ஏராளமானோர் கேரளா வந்துள்ளதால் போட் ஹவுசுகள், ஓட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்துள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்க தலா ரூ.80 லட்சம் வரை படகு குழாம்கள் செலவழிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

68th olymbics on water in kerala


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->