அடுத்த மாதம் 10 ம் தேதி முதல்.. ஐந்தாவது "வந்தே பாரத்" ரயில் சேவை..! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே மிக வேகமாக செல்லும் "வந்தே பாரத்" ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. 

இந்த ரெயில் பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்திலும் ஓடும்.

பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள் புதுடெல்லியிலிருந்து வாரணாசி வரையிலும், புது டெல்லியிலிருந்து ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா வரையிலும், காந்தி நகர் - மும்பை மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என்று நான்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஐந்தாதவது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் 10 ஆம் தேதி இந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழித்தடத்தின் தொலைவு 483 கி.மீட்டர் ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5th vande bharat train start in next month 10th


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->