அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு பீர்..? கல்லா கட்டும் பீர் விற்பனை.! 40 % அதிகரிப்பாம்.! - Seithipunal
Seithipunal


̓கோடை வெயில் காலம் வந்து விட்டாலே  குளிர் பானங்களின் விற்பனைக்கு பஞ்சம் இருக்காது. அதுபோலவே மது பிரியர்களுக்கு கோடை வெயில் காலத்தில் பீர் குடிப்பது உற்சாகமான ஒரு வழக்கமாகும். இதனால் பாண்டிச்சேரியில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் அண்டை மாநிலமான பாண்டிச்சேரி குட்டி கோவா என்று அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மதுபானங்கள் இந்திய அளவில் மட்டுமல்ல அது உலகளவில் புகழ் பெற்றவை. இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மது வகைகளில் 800 பிராண்டுகள் பாண்டிச்சேரியில் தயாரிக்கப்படுபவை ஆகும்.

கோடை காலத்தை முன்னிட்டு இங்கு பீர் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது வழக்கமாக 2 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனையாகும். பாண்டிச்சேரியில்  கோடை காலத்தை முன்னிட்டு  மூன்று லட்சம் கேஸ் பீர்கள் விற்பனையாகியுள்ளதாக முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இங்கு மது குடிப்பதற்காகவே தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் பிரெஞ்சு காலணி ஆதிக்க நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் உள்நாட்டு  பிராண்டுகள் தவிர ஐந்து வெளிநாட்டு பிராண்டுகளும்  பீர் வகைகளில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பாண்டிச்சேரியில் உள்ள மதுபான நிறுவனம் ஒன்று தெரிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 percent increase in beer sales in Pondicherry which is crowded with liquor lovers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->