அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவிகள் - தடுப்பூசி போட்டதுதான் காரணமா.? - Seithipunal
Seithipunal


பள்ளியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு மாணவிகள் திடீரென மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டம் கயாரிபுரா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி நேற்று முன்தினம் பள்ளி மாணவிகளுக்கு டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

அப்போது, 4 மாணவிகளுக்கு திடீரென மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, மாணவிகள் நான்கு பேரும் நலமாக இருப்பதாகவும், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் எதுவும் சாப்பிடாததால் இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 students admitted hospital for unconsious after vaccine in madhya pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->