ஆந்திரா: மருந்து நிறுவன ஆய்வகத்தில் தீ விபத்து - 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் மருந்து நிறுவன ஆய்வகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள பர்வாடா மண்டலில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் கம்பெனியின் ஆய்வகத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து தொழிலாளர்கள் யூனிட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மின்கசிவால் ஏற்பட்டதாக தொழிலாளர்கள் அமைப்பு தலைவர் தெரிவித்தார். 

தீ விபத்தில் பலியானவர்கள் கம்மத்தைச் சேர்ந்த பி ராம்பாபு, குண்டூரைச் சேர்ந்த ராஜேப் பாபு, கோட்டபாட்டைச் சேர்ந்த ஆர் ராமகிருஷ்ணா மற்றும் சோடாவரத்தைச் சேர்ந்த மஜ்ஜி வெங்கட ராவ் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் இந்த தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Killed in Fire At Pharma Company Lab In Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->