இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த "கொரோனா தொற்று"..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் கீழ், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் உலக சுகாதார நிறுவனமும் கொரோனா தொற்று அவசர நிலையை திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி அளவிலான கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 27,212 இல் இருந்து 25,178 ஆகக் குறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1839 new covid cases in 24 hours in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->