ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது.

விடுமுறை நாட்களின் பட்டியல்

ஆகஸ்ட் 1 துருபகா ஷீ-ஜி திருவிழா (காங்டாக்)

ஆகஸ்ட் 7 - ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 8 - முஹர்ரம் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)

ஆகஸ்ட் 9 - சண்டிகர், கவுகாத்தி இம்பால், டேராடூன், சிம்லா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், ஜம்மு, பனாஜி, ஷில்லாங் தவிர நாடு முழுவதும் விடுமுறை.

ஆகஸ்ட் 11 - ரக்ஷாபந்தன்

ஆகஸ்ட் 13 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை

ஆகஸ்ட் 14 -ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம் விடுமுறை

ஆகஸ்ட் 16 - பார்சி புத்தாண்டு (மும்பை மற்றும் நாக்பூரில் விடுமுறை)

ஆகஸ்ட் 18 - ஜென்மாஷ்டமி விடுமுறை

ஆகஸ்ட் 21 -ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 27 - நான்காவது சனிக்கிழமை விடுமுறை

ஆகஸ்ட் 28 - ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 29 - ஹர்தாலிகா தீஜ் ,சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 31 - விநாயக சதுர்த்தி விடுமுறை

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 days holiday for August month


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->