ஜனவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ஜனவரி மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.

2023 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியல்;

ஜனவரி 1 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஜனவரி 2 - புத்தாண்டு கொண்டாட்டம் (மிசோரம்)

ஜனவரி 5 - குரு கோவிந்த் சிங் ஜெயந்தி (ஹரியானா மற்றும் ராஜஸ்தான்)

ஜனவரி 8 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஜனவரி 11 - மிஷனரி தினம் (மிசோரம்)

ஜனவரி 14 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை

ஜனவரி 15 - பொங்கல்/ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஜனவரி 22 - சோனம் லோசர் (சிக்கிம் மட்டும்) / ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி (திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம்)

ஜனவரி 25 -மாநில தினம் (இமாச்சலப் பிரதேசம்)

ஜனவரி 26 - குடியரசு தினம்

ஜனவரி 28 - 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை

ஜனவரி 29 - ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

ஜனவரி 31 - மீ-டேம்-மீ-ஃபை (அசாம்)

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 days Bank holiday on January 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->