பெண்களின் உடல்வலியை போக்கச்செய்யும் பவளமல்லியின் நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


பவளமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டுபிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்

பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து

கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது

பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்றுதின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்

விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும் இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்

வயிற்று புழுக்கள் நீங்க பவளமல்லி இலைசாறு ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 3 வாரம் இதை குடித்து வந்தால் வயிற்று புழுக்கள் வெளியேறும்.

காய்ச்சல் சளி இருமல் குணமாக பவளமல்லி இலைகள் சிறிதளவு எடுத்து கழுவி அதனுடன் சிறிது இஞ்சி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்

இதை வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவந்தால் சளி, இருமல் சரியாகும். ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிக்குன் குனியா டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குணமாகும்

மூட்டு வலி:

சிறிதளவு பவளமல்லி இலைகளை சுத்தப்படுத்தி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதிலாக சீரகம் அல்லது மிளகு சேர்த்து குடிக்கலாம்.

முதுகு வலி குணமாக பவள மல்லி இலையைச் தினந்தோறும் காலை மாலை என இரு வேளையும் 50 மில்லி அளவுக்கு சிறிதளவு எடுத்து சுடுநீரில் போட்டு நன்றாக ஊறவைத்து குடித்து வந்தால் முதுகுவலி மறையும்

பல் ஈறு

பல் ஈறு வலி குணமாக பவளமல்லி மரத்தின் வேரை சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் பல் ஈறுகளில் உண்டாகும் வலியை குணப்படுத்தலாம்.

பவளமல்லி தேநீர்

பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும் இடுப்பு வலி கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிற இடுப்பு வலி பெண்கள் பலருக்கும் தீராத பிரச்சனை.  இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் பவளமல்லியின்  இதழ்களை கசாயம் வைத்து காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் இடுப்பு வலி குணமாகும்.

சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து இருக்கும். அவர்கள் பவளமல்லியின் வேரை மென்று துப்பினாலே போதும். அதனுடைய வீக்கம் குறையும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women back pain solution using pavalamalli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->