பல்லி விழுந்த உணவுகளை நாம் சாப்பிட்டால் ஏன் வாந்தி., மயக்கம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.!! - Seithipunal
Seithipunal


பொதுவாக நமது வீட்டில் தினமும் சமைக்கும் சமையலறையில் திடீரென ஏதேனும் பூச்சிகள் அல்லது பல்லிகள் விழுந்து விடுவது வழக்கம்., இந்த நிகழ்வானது சில நேரங்களில் பலருக்கு சமைக்கும் சத்துணவு கூடங்களில் பள்ளி விழுந்து., இதனை தெரியாமல் சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும்., உயிர் இழந்ததும் நாம் அறிவோம். 

அந்த வகையில்., பல்லி விழுந்தால் ஏன் நமக்கு மயக்கம்., வாந்தி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பானது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து  காண்போம். இந்த உலகில் இருக்கும் பல நாடுகளில் பலவிதமான உணவு பழக்கங்கள் இருந்து வருகிறது.  நமது நாடு மற்றும் மலேசியாவில் பொருத்தவரையில்., ஆடு., கோழி இறைச்சியை சாப்பிடுவது வழக்கம். 

சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பாம்பு மற்றும் தேள் போன்ற உணவுகளையும்., சில பூச்சிகளையும் சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் சிலர் பல்லியையும் சாப்பிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக எந்த இறைச்சியாக இருந்தாலும் சுமார் 55 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் சுமார் 20 நிமிடங்கள் வேக வைத்து சாப்பிட்டால் எந்தவிதமான பிரச்சனையும் நமக்கு ஏற்படாது. 

நமது வீடுகளில் இருக்கும் பல்லிகள் பொதுவாக விஷத்தன்மை கொண்டவை கிடையாது., வீட்டிலிருக்கும் பல்லிகள் விஷத்தன்மை கிடையாது. அவ்வாறு விசமில்லாத பல்லியை ஏன் சாப்பிட்டால் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்ற கேள்வியானது அனைவருக்கும் வந்திருக்கும். இந்த பல்லிகளை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலானது ஒவ்வாமை ஏற்பட்டு அதை வெளியேற்ற நடக்கும் செயலே வாந்தி. 

பல்லியை நாம் பொதுவாகவே ஒரு அருவருப்பான உயிரினமாக பார்த்து பழகி வந்த நிலையில்., அந்த அருவருப்பின் பயத்துக்கான காரணம் வாந்தியாக கூட மாறுகிறது. உணவு முழுமையாக தயாரான பின்னர் அதில் பல்லி விழுந்து இருக்கும் பட்சத்தில்., அதன் மூலமாக நமக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுகிறது. 

பல்லியில் இருக்கும் கிருமிகள் உணவு கெட்டுப்போக செய்கிறது., பொதுவாகவே வீட்டின் உள்புறம் தோட்டத்திலும்., வீட்டின் கழிவறைகளிலும் என்று பல இடங்களில் சுற்றித் திரியும் வழக்கத்தைக் கொண்ட பல்லியானது., அதன் உடல் மற்றும் கால்களில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத லட்சக்கணக்கான கிருமியின் காரணமாக இந்த பாதிப்பானது நமக்கு ஏற்படுகிறது.

இந்த கிருமிகள் அனைத்தும் உணவு கெட்டுப்போக வைத்து., பல்லி விழுந்தது தெரியாமல் நாம் சாப்பிட்டு விட்டோம் என்றால்., இதன் பாதிப்பு காரணமாக நமக்கு வாந்தி., மயக்கம் மற்றும் அது முற்றும் சமயத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why palli inset food are modified poison


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->